பாடல் 37 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 37 · சப்பாணிப் பருவம்
தவப்பய னைத்தொழு வார்க்கருள் செய்ய தடக்கையினேற்றுபொலந்-தடவுத் தொடியிற் செறியு மணிக்கட்டத்திப் பாய்ந்திடுநின்,சிவக்கு மரிக்க ணிழற்று நிழற்றுணை செவ்விய நவ்விமறிச்-சீர்செய னோக்கி மகிழ்ந்துற வாடச் சேர்க்குது மென்றுமனம்,உவப்ப வுவப்ப மறிந்து மறிந்து முறக்க வவிக்கவவி-உயிர்த்து வளர்த்தறுள் கூர்திரு மேனை யுளங்குளி ரச்சுழலும்,குவைக்கவின் மொய்த்த தளிர்க்கையினம்பிகை கொட்டுக சப்பாணி-குளந்தை வயங்க வயங்கு மிளங்குயில் கொட்டுக சப்பாணி.