பாடல் 75 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 75 · சிற்றிற் பருவம்

அண்டத் துலவைந் தருநிழற்கீழமர்வா னமுதா சனர்திளைக்குமரம்பைக் குழுவுக் கணிகலம்போலார்பொற் படிவச் சசிமுதலோர்கண்டத் தொளிர்மங் கலநாணின்காசில் யாப்புக் கழலாமேகாக்கும் வடிவேற் படைத்திறமுன்கருணைத் திறமோ டெடுத்துரைப்பேம்வண்டர்க் கொதுங்கு மாசுரமாவளர்தண் பொழிற்பூந் துணர்க்குவைகண்மருத நிலப்பெண் மகட்குழுநர்வதுவை யாற்றற் கமைத்தமலர்ச்செண்டிற் பொதுளுஞ் சோணாடாசிறியேஞ் சிற்றில் சிதையேலேதிகழுங் குமர மலைக்கரசேசிறியேஞ் சிற்றில் சிதையேலே.
பகிர்