பாடல் 6550 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருமறைக்காடு - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10
திருமறைக்காடு – திருத்தாண்டகம் · 6.23.1
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.