பாடல் 6549 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் · பாடல் 11 / 11

திருநாகைக்காரோணம் – திருத்தாண்டகம் · 6.22.11

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே நேருருவங் காணாமே சென்று நின்றபடியானைப் பாம்புரமே காத லானைப் பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
பகிர்