பாடல் 6767 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருஆவடுதுறை · பாடல் 1 / 11
பண் · திருத்தாண்டகம்
திருஆவடுதுறை · 6.46.1
நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரைஅம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
குறிப்பு பாடல்கள் 6.45.7, 6.45.8, 6.45.9, 6.45.10 கிடைக்கவில்லை