பதிகம் 46 / 99 · ஆறாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருஆவடுதுறை

Thiruaavadudhurai · 11 பாடல்கள் · 6767–6777

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6767

பண் · திருத்தாண்டகம்

நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரைஅம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

குறிப்பு பாடல்கள் 6.45.7, 6.45.8, 6.45.9, 6.45.10 கிடைக்கவில்லை

பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6768
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை வெண்முகிலா யெழுந்துமழை பொழிவான் றன்னைத்தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகிஎன்னானை யெந்தை பெருமான் றன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானேஅன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6769
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்தொத்தினைத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகிவித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6770
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும்ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6771
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை உதயத்தி னுச்சியை உருமா னானைப்பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் தீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதிஅருமணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6772
ஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை எல்லி நடமாட வல்லான் றன்னைக்கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக் குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் றன்னைநீற்றானை நீளரவொன் றார்த்தான் றன்னை நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கைஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

குறிப்பு பாடல்கள் 6.46.2, 6.46.3, 6.46.4, 6.46.5 கிடைக்கவில்லை

பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6773
கைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக் கடல்வரைவான் ஆகாச மானான் றன்னைச்செம்மானப் பவளத்தைத் திகழு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயா னானைஎம்மானை யென்மனமே கோயி லாக இருந்தானை என்புருகு மடியார் தங்கள்அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6774
மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த கண்ணானைக் கண்மூன் றுடையான் றன்னைப்பையா டரவமதி யுடனே வைத்த சடையானைப் பாய்புலித்தோ லுடையான் றன்னைஐயானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6775
வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை விசயனைமுன் னசைவித்த வேடன் றன்னைத்தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள்மாண்டோட வுதைசெய்த மைந்தன் றன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 6776
பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப் பாடலோ டாடல் பயின்றான் றன்னைக்கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் கோலமா நீல மிடற்றான் றன்னைச்செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்டஅந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 6777
தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப்பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னைநெரித்தானை நேரிழையாள் பாகத் தானை நீசனேன் உடலுறுநோ யான தீரஅரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

குறிப்பு பாடல்கள் 6.46.6, 6.46.7, 6.46.8, 6.46.9, 6.46.10 கிடைக்கவில்லை

பாடலின் தனிப் பக்கம்