பதிகம் 57 / 99 · ஆறாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்

Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · 10 பாடல்கள் · 6881–6890

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6881
பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றிசூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்த மணிந்தாய் போற்றிஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி அடங்கார் புரமெரிய நக்காய் போற்றிகாட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6882
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றிசதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றிஎதிரா உலக மமைப்பாய் போற்றி என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றிகதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6883
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வ முடையாய் போற்றிஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாச வண்ண முடியாய் போற்றிவெய்யாய் தணியா யணியாய் போற்றி வேளாத வேள்வி யுடையாய் போற்றிகையார் தழலார் விடங்கா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6884
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றிசூட்சி சிறிது மிலாதாய் போற்றி சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றிமாட்சி பெரிது முடையாய் போற்றி மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றிகாட்சி பெரிது மரியாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6885
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி யுடையாய் போற்றிஎன்னியா யெந்தை பிரானே போற்றி ஏழி னிசையே யுகப்பாய் போற்றிமன்னிய மங்கை மணாளா போற்றி மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றிகன்னியார் கங்கைத் தலைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6886
உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றிஎரியாய தெய்வச் சுடரே போற்றி ஏசுமா முண்டி யுடையாய் போற்றிஅரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி அறிவே அடக்க முடையாய் போற்றிகரியானுக் காழியன் றீந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6887
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றிபண்மேலே பாவித் திருந்தாய் போற்றி பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றிவிண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றிகண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6888
முடியார் சடையின் மதியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றிதுடியா ரிடையுமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றிஅடியா ரடிமை அறிவாய் போற்றி அமரர் பதியாள வைத்தாய் போற்றிகடியார் புரமூன்று மெய்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6889
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ண லரியாய் போற்றிஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி எண்ணா யிரநூறு பேராய் போற்றிநாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றிகாற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடலின் தனிப் பக்கம்