பதிகம் 47 / 99 · ஆறாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருஆவடுதுறை

Thiruaavadudhurai · 10 பாடல்கள் · 6778–6787

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6778

பண் · திருத்தாண்டகம்

திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்கஉருவேயென் னுறவே யென்னூனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய்அருவாய வல்வினைநோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6779
மாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின் மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே இடங்கொடுத்து நாளு நாளும்ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6780
வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்உரையா வுயிர்போகப் பெறுவே னாகில் உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னேகரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்கரையா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6781
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக்கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங் களிறுரித்த கங்காளா எங்கள் கோவேநிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும் நில்லா வுயிரோம்பு நீத னேனான்அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

குறிப்பு பாடல்கள் 6.46.11, 6.47.1, 6.47.2, 6.47.3 கிடைக்கவில்லை

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6782
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்துறவாத துன்பந் துறந்தேன் றன்னைச் சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னேஉறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்டஅறவா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6783
கோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு கொழுமலரான் றன்சிரத்தைக் கையி லேந்திக்கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்நானார் உமக்கோர் வினைக்கே டனேன் நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னேஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6784
உழையுரித்த மானுரிதோ லாடை யானே உமையவள்தம் பெருமானே இமையோ ரேறேகழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா கயிலாய மலையானே உன்பா லன்பர்பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே பேரருளுன் பால தன்றேஅழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6785
உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர் உலகம் பலிதிரிவாய் உன்பா லன்புகலந்தார் மனங்கவருங் காத லானே கனலாடுங் கையவனே ஐயா மெய்யேமலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்தழுந்தி நாளு நாளும்அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6786
பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் பசுவேறி யூரூரன் பலிகொள் வானேகல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்எல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும் ஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக்கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

குறிப்பு பாடல்கள் 6.47.4, 6.47.5, 6.47.6, 6.47.7, 6.47.8 கிடைக்கவில்லை

பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 6787
துறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன் துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்பிறந்தேன் நின்றிருவருளே பேசி னல்லாற் பேசாத நாளெல்லாம் பிறவா நாளேசெறிந்தார் மதிலிலங்கைக் கோமான் றன்னைச் செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பாடலின் தனிப் பக்கம்