தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங்கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங் கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
இடைமரு தீங்கோ யிராமேச் சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்சடைமுடி சாலைக் குடிதக் களூர் தலையாலங் காடு தலைச்சங் காடுகொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடுகடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரிஅச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளிகச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும் நின்றியூர் நீடூர் நியம நல்லூர்இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசிவெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர்ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை ஆலங் காடும் அரைதைப் பெரும்பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்காழி கடல்நாகைக் காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறைகொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்குஅண்டர் தொழுமதிகை வீரட் டானம் ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்லதுறையூர் சோற்றுத்துறை சூல மங்கை தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர் ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங் கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னிநிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற கயிலாய நாதனையே காண லாமே.
பாடலின் தனிப் பக்கம்