பதிகம் 6 / 99 · ஆறாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்

Thiruvadhigaiveerattaanam Thiruvaditthirutthaandagam · 10 பாடல்கள் · 6372–6381

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6372
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடிசரவணத்தான் கைதொழுது சாரும்மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடிபரவுவார் பாவம் பறைக்கும்மடி பதினெண் கணங்களும் பாடும்மடிதிரைவிரவு தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6373
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடிபடுமுழவம் பாணி பயிற்றும்மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடிகடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி கடல்வையங் காப்பான் கருதும்மடிநெடுமதியங் கண்ணி யணிந்தானடி நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6374
வைதெழுவார் காமம்பொய் போகாவடி வஞ்சவலைப் பாடொன் றில்லாவடிகைதொழுது நாமேத்திக் காணும்மடி கணக்கு வழக்கைக் கடந்தவடிநெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடிதெய்வப் புனற்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6375
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி அழகெழுத லாகா அருட்சேவடிசுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி சோமனையுங் காலனையுங் காய்ந்தவடிபெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடிதிருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6376
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி ஊழிதோ றூழி உயர்ந்தவடிபொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடிஇருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி இன்புற்றார் இட்டபூ ஏறும்மடிதிருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6377
திருமகட்குச் செந்தா மரையாமடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடிபொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடிஉருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி உருவென் றுணரப் படாதவடிதிருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6378
உரைமாலை யெல்லா முடையவடி உரையால் உணரப் படாதவடிவரைமாதை வாடாமை வைக்கும்மடி வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடிஅரைமாத் திரையில் லடங்கும்மடி அகலம் அளக்கிற்பார் இல்லாவடிகரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ்வீரட் டானக் காபாலியடி.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6379
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி நடுவாய் உலகநா டாயவடிசெறிகதிருந் திங்களுமாய் நின்றவடி தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடிமறுமதியை மாசு கழுவும்மடி மந்திரமுந் தந்திரமு மாயவடிசெறிகெடில நாடர் பெருமானடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6380
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி அடியார்கட் காரமுத மாயவடிபணிபவர்க்குப் பாங்காக வல்லவடி பற்றற்றார் பற்றும் பவளவடிமணியடி பொன்னடி மாண்பாமடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடிதணிபாடு தண்கெடில நாடன்னடி தகைசார் வீரட்டத் தலைவனடி.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 6381
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி அரக்கனையும் ஆற்றல் அழித்தவடிமுந்தாகி முன்னே முளைத்தவடி முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடிபந்தாடு மெல்விரலாள் பாகன்னடி பவளத் தடவரையே போல்வானடிவெந்தார் சுடலைநீ றாடும்மடி வீரட்டங் காதல் விமலனடி.
பாடலின் தனிப் பக்கம்