அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றேமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்திவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கிஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்றபெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவாமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாயபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானைஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை அருமறையோ டாறங்க மாயி னானைச்சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்கபெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளிஅரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற் துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
காரானை ஈருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன் றன்னைஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
முற்றாத பால்மதியஞ் சூடினானை மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத் திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக் கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்றபேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பாடலின் தனிப் பக்கம்