பாடல் 7012 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் · பாடல் 1 / 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.1

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங்கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங் கயிலாய நாதனையே காண லாமே.
பகிர்