பாடல் 36 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்
திருத்தொண்டர் சதகம் 36 · அப்பூதிநாயனார்
துங்கமிகு திங்களூர் வாழுநான் மறைநெறிச்சொற்பயிலு மப்பூதி யார்துஞ்சுகொலை களவுகட் காமங் கடிந்தறத்தூயமனை யறம் வழா மற்றங்குபொரு ளிடமைந்தர் மேதிநிரை மற்ற துந்தக்கவாக் கரசி னாமஞ்சாற்றி மகிழ் நாளதனில் வாக்கரசர் பந்தர்வழிசார்ந்து பெயர் கண்டு காதல்பொங்கமனை சென்றபொழு தன்பர் பெயர் வினவியடிபோற்றிய தாக்கி மூத்த புதல்வனைக்கதலியிலை கொடுவா வெனச்சொலப்பொங்கரவு தீண்டி வீயமங்காத சேயின் விட மாறவமு திடவுமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.