பாடல் 50 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 50 · கூற்றுவநாயனார்

குன்றாத கீர்த்தியுறை தென்களந் தைப்பதிக்கொற்றவரி லுற்ற தொல்பேர்கூற்றனா ரருளுண்மை சாற்றியடி யார்க்கன்புகொண்டுநற் றொண்டு புரிவோர்துன்றுபகை மன்னர் போர் வென்று திறை கொண்டுளார்துகளிலாத் தில்லை நகர்வாழ்தூயமறை யோர்தமை முடிசூட்ட வேண்டவவர்சோழனுக் கன்றி யாங்கள்வென்றி முடி சூடுவது செய்யோ மெனக்கழறிவேன்மலைய னாடு செல்லமிகமனந் தளர்வாகி நின்னடிக் கமலங்கள்வேண்டவே கனவில் வந்துமன்றாடு பூங்கழற் சூட்டியர சாளமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்