பாடல் 90 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 90 · திருக்கூட்டம்

மிக்கதென் மதுரை தனி லறுபத்து நான்கு திருவிளையாடல் செய்து காஞ்சிமேவுநாற் பத்தியெண் ணாயிரவ ராயருண்மிகுந்தகா சோணந் தனிற்றக்கநா லாயிரவ ராய்த்தில்லை மானகர்தழைக்குமூவாயிரவ ராய்ச்சாற்றுமா ரூரிலறு நூற்றொருவ ராயுண்மைசாரும் பெருந்துறை யினிற்பக்குவ மிகுந்தமுந் நூற்றொருவர் காய்வனம்பயில்வீழி மிழலை நகரிற்பண்பு பெறு நூற்றொருவ ராய்மிகுஞ் சிவதையிற்பன்னிருவ ராயனு தினமைக்கடல் பெறும் புவியி லென்றுந் துதிப்பமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்