பாடல் 93 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 93 · மாணிக்கமலைச்சிறப்பின்சீர்

உன்னுநால் விசைகொண் டெழுந்து பூ தலமமர்ந்துயரமீ ரெட்டகல மூன்றுயோசனை பிரத்தின மலைக்கொழுந் தாய்மம்பமோங்கியெண் டீர்த்த மிக்கத்தென்னுலவு மங்கி திசை மின்னுபஞ் சாக்கரத்தீர்த்தமொடு தெய்வ தீர்த்தஞ்செப்புப்பஞ் சாக்கரக் குகையுமுனி வோர்தவஞ்செய்கையுந் துய்ய புலியும்பன்னக மிகும்பல விலங்கும் வெந் தொழிலுருப்பான்மையுங் காக மணுகாப்பண்பும்விண் டருவெனத் கண்டலை தடாகமும்பயில்வள மிலங்க வுலகின்மன்னுபெரி யோர் திருப் பொன்னடி பணிந்திடமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்