நூற்பா 280 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 74 / 93

தொல்காப்பியம் 280 · உயிர்மயங்கியல்

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
பகிர்

விளக்கம்

இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.

இ - ள்: வேற்றுமைக்கண்ணும் - ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - ஊகார ஈறு அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

எ - டு: ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும்.

வேக்குடம் வேதலையுடைய குடமென விரியும். (74)