நூற்பா 285 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 79 / 93

தொல்காப்பியம் 285 · உயிர்மயங்கியல்

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்.
பகிர்

விளக்கம்

இது வல்லெழுத்தினோடு வற்று வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

இ - ள்: சுட்டுமுதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் – உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும்; எ - று.

எ - டு: அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு செவி
தலை புறம் என வரும். இதனை 'வஃகான்மெய்கெட' (எழு - 122) என்பதனான் முடிக்க. (79)