நூற்பா 293 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 87 / 93
தொல்காப்பியம் 293 · உயிர்மயங்கியல்
ஓகார இறுதி ஏகார இயற்றே.
விளக்கம்
இஃது ஓகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது.
இ-ள்: ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: ஓக்கடிது சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (87)