நூற்பா 296 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 90 / 93

தொல்காப்பியம் 296 · உயிர்மயங்கியல்

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றேஒகரம் வருதல் ஆவயினான.
பகிர்

விளக்கம்

இஃது ஓகார ஈற்று வேற்றுமைமுடிபு கூறுகின்றது.

இ-ள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று – ஓகார ஈறு வேற்றுமைக்கண்ணும் அவ் *வோகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்குமுடியும். ஆவயினான *ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக; எ-று.

எ-டு:ஓஒக்கடுமை கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (90)