நூற்பா 87 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · பிறப்பியல் · பாடல் 2 / 21
தொல்காப்பியம் 87 · பிறப்பியல்
அவ் வழி,பன்னீர் உயிரும் தம் நிலை திரியாமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.
விளக்கம்
இஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது.
இ-ள்: பன்னீருயிருந் தந்நிலை திரியா - பன்னிரண்டு உயிருந்தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த - அவ்வுந்தி யிடத்துப் பிறந்த, மிடற்று வளியின் இசைக்கும் - மிடற்றின் கண் நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும்; எ-று.
எனவே குற்றியலிகரமுங் குற்றியலுகரமுந் தந்நிலை திரியு மென்றாராயிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. (2)