நூற்பா 89 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · பிறப்பியல் · பாடல் 4 / 21

தொல்காப்பியம் 89 · பிறப்பியல்

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்னஅவைதாம்,அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
பகிர்

விளக்கம்

இதுவும் அது.

இ-ள்: இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பாலைந்தும்-இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்றோரன்ன -அகர ஆகாரங்கள்போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும், அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநா

விளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய; எ-று.

அண்பல் வினைத்தொகை. எனவே நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று. இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. (4)