இயல் 3 / 9 · எழுத்ததிகாரம் · தொல்காப்பியர்

பிறப்பியல்

Pirappiyal · 21 நூற்பாக்கள் · 86–106

பகிர்

பாடல்கள் The verses

1 நூற்பா 86
உந்தி முதலா முந்து வளி தோன்றிதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇபல்லும் இதழும் நாவும் மூக்கும்அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடிஎல்லா எழுத்தும் சொல்லும் காலைபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயலதிறப்படத் தெரியும் காட்சியான.
பாடலின் தனிப் பக்கம்
2 நூற்பா 87
அவ் வழி,பன்னீர் உயிரும் தம் நிலை திரியாமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.
பாடலின் தனிப் பக்கம்
4 நூற்பா 89
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்னஅவைதாம்,அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
பாடலின் தனிப் பக்கம்
11 நூற்பா 96
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்நா நுனி பரந்து மெய் உற ஒற்றதாம் இனிது பிறக்கும் தகார நகாரம்.
பாடலின் தனிப் பக்கம்
14 நூற்பா 99
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உறஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
பாடலின் தனிப் பக்கம்
18 நூற்பா 103
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்.
பாடலின் தனிப் பக்கம்
19 நூற்பா 104
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணிஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.
பாடலின் தனிப் பக்கம்
20 நூற்பா 105
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழு வளி இசை அரில் தப நாடிஅளபின் கோடல் அந்தணர் மறைத்தே.
பாடலின் தனிப் பக்கம்
21 நூற்பா 106
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே.
பாடலின் தனிப் பக்கம்