நூற்பா 99 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · பிறப்பியல் · பாடல் 14 / 21

தொல்காப்பியம் 99 · பிறப்பியல்

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உறஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
பகிர்

விளக்கம்

இதுவும் அது.

இதன் பொருள்: நா வீங்கி விளிம்பு அண்பல் முதலுற – நா மேனோக்கிச் சென்று தன் விளிம்பு அண்பல்லி னடியிலே உறாநிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய் - அவ்விடத்து அவ் வண்ணத்தை அந் நாத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட ளகாரமாய் - அவ்விடத்து அவ்வண்ணத்தை அந் நாத் தடவ ளகாரமாயும், இரண்டும் பிறக்கும் - இவ்விரண்டெழுத்தும் பிறக்கும் என்றவாறு.

1. அணருதல் - மேனோக்கிச் சேறல், அணரி - மேனோக்கிச் சென்று.

2. அவ்விரண்டும் என முன்போற் கூறலே பொருத்தம்.

ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க.

1இத்துணையும் நாவதிகாரங் கூறிற்று. (14)

1. இத்துணையும் நாவதிகாரம் கூறிற்றென்றது, அ - ம் சூத்திரத்தில் நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட வைத்து அது முதலாக நாவிற் பிறக்கும் எழுத்துக்களையே கூறிவந்தமையை. அதிகாரம் - தலைமை, முறைமை என்பர் நச்சினார்க்கினியர்.