நூற்பா 97 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · பிறப்பியல் · பாடல் 12 / 21
தொல்காப்பியம் 97 · பிறப்பியல்
அணரி நுனி நா அண்ணம் ஒற்றறஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.
விளக்கம்
இதுவும் அது
இ-ள்: நுனி நா அணரி அண்ணம் ஒற்ற-நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்- றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்;எ-று
இதுமுதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவதிகாரம்2 பற்றிக் கூறுகின்றார்.,
ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. (12)
2. நாவதிகாரம்-நாவினால் ஏற்பட்ட முறைமை