நூற்பா 101 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · பிறப்பியல் · பாடல் 16 / 21
தொல்காப்பியம் 101 · பிறப்பியல்
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்.
விளக்கம்
இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.
இதன் பொருள்: பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் – மேற் பல்லுங் கீழி தழுங் கூட வகாரமானது பிறக்கும் என்றவாறு.
'வ என வரும். இதற்கு இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். (16)