பாடல் 57 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்
வடிவேல் சதகம் 57
தின்பண்ட மேயுதவல் எண்மணஞ் செய்வித்தல்சிறந்தகண் ணாடியதுவுந்தினவதும் அடங்கிட ஆவுக்கு உரைஞ்சுகல்திகற்சுமை தான்தாங்கியும்இன்பமுளகாவுகள் தண்ணீரின் பந்தல்கள்ஏரிகுளம் வாவிகளுமேஇதுவதாம் அடைக்காய் வெற்றிலை சுண்ணாம்பும்இனியபெண் போகமதுவும்அன்புடன் தலைக்கெண்ணெய் அரவைப்பிணமெடுத்(து)அடக்கலும் விலங்கூணதும்அழுக்ககற் றிடும்வண்ணான் நாவிதன் உபகாரம்அறமெண்ணான் காகுமிது செய்செம்பவள வாயுமை தந்தகும ரேசனேசெங்கோடன் மனதிலகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெயமுருக வடிவேலனே!