வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்குமறிதிரைச் சங்கொலிடமதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரளமகரந்த முண்டுவண்டின்கிளையொடு நின்றிருக் கேசபா சத்தினொடுகிளர்சைவ லக்கொத்தெழக்கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு தத்தமிற்கேளிர்க டழீஇக்கொண்டெனத்தளையொடு கரையடிச் சிறுகட் பெருங்கைத்தடக்களி றெடுத்து மற்றத்தவளக் களிற்றினொடு முட்டவிட் டெட்டுமததந்தியும் பந்தடித்துவிளையாடும் வையைத் தடந்துறை குடைந்துபுதுவெள்ளநீ ராடியருளேவிடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடிவெள்ளநீ ராடியருளே.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
நிரைபொங் கிடுஞ்செங்கை வெள்வளை களிப்பநகைநிலவுவிரி பவளம்வெளிறநீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவறனெறிகுழற் கற்றை சரியத்திரைபொங்கு தண்ணந் துறைகுடைந் தாடுவசெழுந்தரங் கக்கங்கைநுண்சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கடறிளைத்தாடு கின்றதேய்ப்பக்கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக்கழனியிற் கன்னியாமுலைக்களபக் குழம்பைக் கரைத்துவிட் டள்ளற்கருஞ்சேறு செஞ்சேறதாய்விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுதுவெள்ளநீ ராடியருளேவிடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடிவெள்ளநீ ராடியருளே.
பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் றிருமேனிபாசொளி விரிப்ப வந்தண்பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்பருமுத்த மரகதமாய்த்தண்ணாறு மல்லற் றுறைச்சிறை யனங்களிதழைக்குங் கலாமஞ்ஞைபாய்ச்சகலமுந் நின்றிருச் சொருபமென் றோலிடுஞ்சதுமறைப் பொருள் வெளியிடக்கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்களபமுங் கத்தூரியும்கர்ப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியுங்காளிந்தி யுங்கங்கையாம்விண்ணாறு மளவளாய் விளையாடு வையைபுதுவெள்ளநீ ராடியருளேவிடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடிவெள்ளநீ ராடியருளே.
தூங்குசிறை யறுகா லுறங்குகுழ னின்றுணைத்தோழியர்கண் மெற்குங்குமந்தோயும் பனித்துறைச் சிவிறவீ சக்குறுந்துளியெம் மருங்குமோடிவாங்குமலை வில்லிமார் விண்ணுறு நனைந்தவர்வனைந்திடு திகம்பரஞ் செவ்வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடுமஞ்சள்விளை யாடலேய்ப்பத்தேங்குமலை யருவிநெடு நீத்தது மாசுணத்திரள்புறஞ் சுற்றியீர்ப்பச்சினவேழ மொன்றொரு சுழிச்சுழலன் மந்தரந்திரைகடன் மதித்தன்மானும்வீங்குபுனல் வையைத்தடந்துறை குடைந்துபுதுவெள்ளநீ ராடியருளேவிடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடிவெள்ளநீ ராடியருளே.
துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடுதுறையிற் றுறைத்தமிழொடும்தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி யெனுந்துணைத்தோழீமூழ் கிப்புனன்மடுத்தொளிக்கும் பதத்துமற் றவளென வனப்பேடையோடிப் பிடிப்பதம்மையொண்பரி புரத்தொனியு மடநடையும் வௌவினதுணர்ந்துபின் றொடர்வதேய்ப்பநெளிக்குந் தரங்கத் தடங்கங்கை யுடனொட்டிநித்திலப் பந்தாடவும்நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன்னெடுத்திரைக் கையெடுத்துவிளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வையைநெடுவெள்ளநீ ராடியருளேவிடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடிவெள்ளநீ ராடியருளே.
துங்க முலைப்பொற் குடங்கொண்டுதூநீர்நீந்தி விளையாடுந்துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற்சுண்ண மெறிய வரச்சேந்தஅங்கண் விசும்பி னின்குழற்காட்டறுகாற் கரும்ப ரெழுந்தார்ப்பதையன் றிருமே னியலம்மையருட்கட் சுரும்பார்த் தெழன்மானச்செங்க ணிளைஞர் களிர்காமத்தீமுண் டிடக்கண் டிளமகளிர்செழுமென் குழற்கூட் டகிற்புகையாற்றிரள்காய்க் கதலி பழுத்துநறைபொங்கு மதுரைப் பெருமாட்டிபுதுநீ ராடி யருளுகவேபொருநைத் துறைவன் பொற்பாவாய்புதுநீ ராடி யருளூகவே.
இழியும் புனற்றண் டுறைமுன்றிலிதுவெம் பெருமான் மண்சுமந்தஇடமென் றலர்வெண் கமலப்பெண்ணிசைப்பக் கசிந்துள் ளுருகியிருவிழியுஞ் சிவப்பவானந்தவெள்ளம்பொழிந்து நின்றனையால்மீண்டும் பெருக விடுத்தவர்கோர்வேலை யிடுதன் மிகையன்றேபிழியு நறைக்கற் பகமலர்ந்தபிரச மலர்பூந் துகண்மூழ்கும்பிறைக்கோட் டயிரா வதங்கூந்தற்பிடியோ டாடத் தேனருவிபொழியும் பொழிற்கூ டலிற்பொலிவாய்புதுநீ ராடி யருளுகவேபொருநைத் துறைவன் பொற்பாவாய்புதுநீ ராடி யருளூகவே.
மறிக்குந் திரைத்தண் புனல்வையைவண்ட லிடுமண் கூடைகட்டிவாரிச் சுமந்தோர்க் கம்மைதுணைமணிப்பொற் குடத்திற் கரைத்தூற்றும்வெறிக்குங் குமச்சே றெக்கரிடும்விரைப்பூந் துறைமண் போலொருத்திவெண்பிட் டிடவு மடித்தொருவன்வேலை கொளவும் வேண்டுமெனக்குறிக்கு மிடத்திற் றடந்தூநீர்குடையப் பெறினக் கங்கைதிருக்கோடீ ரத்துக் குடியிருப்புங்கூடா போலும் பொலன்குவட்டுப்பொறிக்குஞ் சுறவக் கொடியுயர்ததாய்புதுநீ ராடி யருளுகவேபொருநைத் துறைவன் பொற்பாவாய்புதுநீ ராடி யருளூகவே.
சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்துதொடுத்த விரைத்தொடையும்சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிருதுங்கக் கொங்கைகளின்விற்கொடி கோட்டிய குங்கும முங்குடைவெள்ளங் கொள்ளைகொளவெளியே கண்டுநின் வடிவழ கையன்விழிக்கு விருந்து செயவிற்கொடி யோடு கயற்கொடி வீரனெடுத்த கருப்புவிலும்இந்திர தனுவும் வணங்க வணங்குமிணைப்புரு வக்கொடிசேர்பொற்கொடி யிமய மடக்கொடி வையைப்புதுநீ ராடுகவேபொருநைத் துறையொடு குமரித் துறையவள்புதுநீ ராடுகவே.
கொள்ளைவெ ளருவி படிந்திடு மிமயக்கூந்தன் மடப்பிடிபோல்கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல்குடையு மனப்பெடைபோல்தெள்ளமு தக்கட னடுவிற் றோன்றுசெழுங்கம லக்குயில்போல்தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொருசெம்பவ ளக்கொடிபோல்கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசைகற்றுப் பொற்றருவிற்களிநற வுண்ட மடப்பெடையோடுகலந்து முயங்கிவரிப்புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்புதுநீ ராடுகவேபொருநைத் துறையொடு குமரித் துறையவள்புதுநீ ராடுகவே.