நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளிநெற்றியிற் றொட்டிட்ட வெண்ணீற்றினொடு புண்டரக் கீற்றுக்கு மேற்றிடவொர்நித்திலச் சுட்டி சாத்தித்தாராட்டு சூழியக் கொண்டையு முடித்துத்தலைப்பணி திருத்தி முத்தின்றண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கொர்தமனியக் கொப்பு மிட்டுப்பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்பாலமுத மூட்டி யொருநின்பானாறு குமுதங் கனிந்தூறு தேறல்தன்பட்டாடை மடிந னைப்பச்சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்றுன்றிருத் தாதை நின்னையொருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமுனோடித் தவழ்ந்து சென்றுதண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினியதாய்வயிறு குளிர வூட்டித்தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்றாடோ ய் தடக்கை பற்றிப்பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்பணைத்தோ ளெருத்தமேறிப்பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்பசுங்கதிர் ததும்ப மணிவாய்த்தெண்ணிலா விரிய நின்றாடும் பசுந்தோகைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்சுவர்க்கா னிறுத்தி மேருத்தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிருசுடர் விளக்கிட்டு முற்றஎற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கலமெடுத்தடுக் கிப்பு துக்கூழின்னமுத முஞ்சமைத் தன்னை நீபன்முறையிழைத்திட வழித்த ழித்தோர்முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்முன்னின்று தொந்தமிடவுமுனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரியமூதண்ட கூடமூடுஞ்சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்குமழகதிர்க் கற்றை சுற்றும்வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலைமடுப்பக் கடைக்க ணோக்கும்பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்தப்புதுப்புணரி நீத்த மையன்புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்போகசா கரம டுப்பஅங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்தியவனைத் துயிர்க ளுந்தளிர்ப்பவருண்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடுத்தலையெறிந் துகள வுகளுஞ்செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
பண்ணறா வரிமிடற் றறுகாண் மடுப்பப்பசுந்தேற லாற லைக்கும்பதுமபீ டிகையுமுது பழமறை விரிந்தொளிபழுத்தசெந் நாவு மிமையாக்கண்ணறா மரகதக் கற்றைக் கலாமஞ்ஞைகண்முகி றதும்ப வேங்குங்கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்கற்பூர வல்லி கதிர்கால்விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுதவெள்ளருவி பாய வெடிபோய்மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகைவிண்டொழுகு முண்ட கப்பூந்தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லிசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
முகமதி யூடெழு நகைநில வாடமுடிச்சூ ழியமாடமுரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டிமுரிப்பொ டசைந் தாடஇகல்விழி மகரமு மம்மக ரம்பொருமிருமக ரமுமாடவிடுநூ புரவடி பெயரக் கிண்கிணெனுங்கிண் கிணியாடத்துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குறுவண்டு துவண்டாடத்தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்சூலுடை யாலிடைமற்றகில சராசர நிகிலமொ டாடிடவாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.
தசைந்திடு கொங்கை யிரண்டல தெனவுரைதருதிரு மார்பாடத்தாய்வரு கென்பவர் பேதைமை கண்டுததும்புபு னகையாடப்பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்பச்சுடல் சொல்லவுமோர்பைங்கொடி யொல்கவு மொல்கி நுடங்கியபண்டி சரிந்தாடஇசைந்திடு தேவை நினைந்தன வென்னவிரங்கிடு மேகலையோடிடுகிடை யாட வியற்கை மணம்பொதியிதழ்வழி தேறலினோடசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினிதாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.
பரிமள மூறிய வுச்சியின் முச்சிபதிந்தா டச்சுடர்பொற்பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடுபனிவெண் ணிலவாடத்திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்தெய்வம ணங்கமழுந்திருமேனியின் முழு மரகத வொளியெண்டிக்கும் விரிந்தாடக்கருவினை நாறு குதம்பை ததும்பியகாது தழைந்தாடக்கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடுகமலத் திருமுகநின்அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திடவாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.
குருமணி வெயில்விட மரகத நிழல்விரிகுன்றே நின்றூதுங்குழலிசை பழகிய மழைமுகி லெழவெழுகொம்பே வெம்பாசமருவிய பிணிகெட மலைதரு மருமைமருந்தே சந்தானம்வளர்புவ னமுமுணர் வருமரு மறையின்வரம்பே செம்போதிற்கருணையின் முழுகிய கயறிரி பசியகரும்பே வெண்சோதிக்கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர்கன்றே யென்றோதும்திருமகள் கலைகமகடலைமகள் மலைமகள்செங்கோ செங்கீரைதெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்செங்கோ செங்கீரை.
சங்குகி டந்தத டங்கைநெ டும்புயறங்காய் பங்காயோர்தமனிய மலைபடர் கொடியெனவடிவுதழைந்தா யெந்தாயென்றங்கெண டும்புவ னங்கடொ ழுந்தொறுமஞ்சே லென்றோதும்அபயமும் வரதமு முபயமு முடையவணங்கே வெங்கோபக்கங்குன்ம தங்கய மங்குல டங்கவிடுங்கா மன்சேமக்கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின்கண்போ லுஞ்சாயற்செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடிசெங்கோ செங்கீரைதெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்செங்கோ செங்கீரை.