கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்றுகளிறுபெரு வயிறுதூர்ப்பக்கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்கலைமதிக் கலசவமுதுக்கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திடவெடுத்தமுத கலசம் வெவ்வேறீந்திடுவ தெனவுமுழு முத்திட் டிழைத்திட்டவெறிபந்தின் நிரையென்னவும்விரைக்குந் தளிர்க்கைக் கொழுந்தா மரைத்துஞ்சிமீதெழுந் தார்த்தபிள்ளைவெள்ளோதி மத்திரளி தெனவுந் கரும்பாறைமீமிசைச் செந்சாந்துவைத்தரைக்குந்திரைக்கைவெள் ளருவிவை யைத்துறைவியம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்செருகுதிரு மணவாளன்மேற்செழுமணப் பந்தரி லெடுத்தெறியு மமுதவெண்டிரளையிற் புரளுமறுகாற்பைங்கட் சுரும்பென விசும்பிற் படர்ந்தெழும்பனிமதி மிசைத்தாவிடும்பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனைப்படைவிழிக் கயல்பாய்ந்தெழுவெங்கட் கடுங்கொலைய வேழக்கு ழாமிதெனமேகக் குழாத்தைமுட்டிவிளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகைவிண்டவம் பைந்துகோத்தஅங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிருவம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளிகலப்பச் சிவப்பூறியும்கருணைப் பெருக்கூற வமுதூறு பார்வைக்கடைக்கட் கறுப்பூறியும்நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்ணகையூறு நிலவூறியும்நற்றாரள வம்மனையொர் சிற்குணத் தினைமூன்றுநற்குணங் கதுவல் காட்டஉள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீருமுற்றிடு துவாத சாந்தத்தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்டருழுவலன் பென்புருகநெக்கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறலம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
குலைபட்ட காந்தட் டளிர்க்கையிற் செம்மணிகுயின்றவம் மனைநித்திலங்கோத்தவம் மனைமுன் செலப்பின் செலுந்தன்மைகோகனக மனையாட்டிபாற்கலைபட்ட வெண்சுடர்க் கடவுடோ ய்ந் தேகவதுகண்டுகொண் டேபுழுங்குங்காய்கதிர்க் கடவுளும் பின்றொடர்வ தேய்ப்பக்கறங்கருவி தூங்குவோங்குமலைப்பட்ட வாரமும் வயிரமும் பிறவுமாமாமணித் திரளைவாரிமறிதிரைக் கையா லெடுத்தெறிய நாற்கோட்டுமதகளிறு பிளிறியோடும்அலைபட்ட வையைத் துறைச்சிறை யனப்பேடையம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
தமரான நின்றுணைச் சேடியரி லொருசிலர்தடக்கையி நெடுத்தாடுநின்றரளவம் மனைபிடித் தெதிர்வீசி வீசியிடசாரிவல சாரிதிரியாநிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறியநிரைநிரைய தாய்ககனமேல்நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமுநிரைத்துவைத் ததுகடுப்பஇமிரா வரிச்சுரும் பார்த்தெழப் பொழிலூடெழுந்தபைந் தாதுல கெலாம்இருள்செயச் செய்துநின் சேனா பராகமெனுமேக்கமள காபுரிக்கும்அமரா மதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவியம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீதுதித்தவ ளெதிர்த்துநின்னோடொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மனைதேடியோடியா டித்திரியநீபெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தைபிறைமுடி துளக்க முடிமேற்பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப்பெண்கொடியு மாடன்மானவெயரா மனம்புழுங் கிடுமமரர் தச்சனும்வியப்பச் செயுந்தவளமாமேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலாவீசத் திசைக்களிறெலாம்அயிரா வதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவியம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர்முளரிம ணங்கமழமொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்முயங்கி மயங்கியிடக்கொத்து மணித்திர ளிற்செயு மம்மனைகுயிலின்மி ழற்றியநின்குழலினி சைக்குரு கிப்பனி தூங்குகுறுந்துளி சிந்தியிடவித்துரு மத்திலி ழைத்தவு நின்கைவிரற்பவ ளத்தளிரின்விளைதரு மொள்ளொளி திருடப் போவதுமீள்வது மாய்த்திரியஅத்தன் மனத்தெழு தியவுயி ரோவியமாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாணசவுந்தரியாடுக வம்மானையே.
கிளநில வுமிழ்பரு முத்தின் கோவையெடுத்தவர் திருமார்புக்கிடுவ கடுப்பவு மப்பரி சேபலமணியி னியற்றியிடும்வளரொளி விம்மிய வம்மனை செல்வதுவானவி லொத்திடவும்மனனெக் குருகப் பரமா னந்தமடுத்த திருத்தொண்டர்க்களிகனி யத்திரு வருள்கனி யுங்கனியாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாண சவுந்தரியாடுக வம்மானையே.
கைம்மல ரிற்பொலி கதிர்முத் தம்மனைநகைமுத் தொளிதோயக்கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்கமலச் சுடர்கதுவச்செம்மணி யிற்செய் திழைத்தன வெனவுஞ்சிற்சிலர் கட்கடையின்செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்செய்தன கொல்லெனவுந்தம்மன மொப்ப வுரைப்பன மற்றைச்சமயத் தமைவுபெறார்தத்தமி னின்று பிதற்றுவ பொருவத்தனிமுதல் யாமென்பார்க்கம்மனை யாயவர் தம்மனை யானவளாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாண சவுந்தரியாடுக வம்மானையே.
ஒள்ளொளி மரகத மும்முழு நீலமுமொண்டர ளத்திரளும்ஒழுகொளி பொங்க விளைந்திடு மம்மனையொருமூன் றடைவிலெடாக்கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவகண்ணுதல் பாற்செலநின்கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்காமர் கருங்குயிலும்பிள்ளைவெ ளோதிம மும்முறை முறையாற்பெருகிய காதலைமேற்பேச விடுப்ப கடுப்ப வணைத்தொருபெடையோ டாசவனம்அள்ளல் வயிற்றுயின் மதுரைத் துரைமகளாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாணசவுந்தரியாடுக வம்மானையே.