புராணம் 1 / 5 · திருமலைச் சருக்கம் · சேக்கிழார்

திருமலைச் சிறப்பு

Thirumalai Sirappu · 40 பாடல்கள் · 11–50

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 11
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்பன்னும் நீள்பனி மால்வரைப் பாலதுதன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 12
அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்தியபுண்ணியந் திரண்டு உள்ளது போல்வது.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 13
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளிஇலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 14
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்கான வீணையின் ஓசையும் காரெதிர்தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 15
பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்அனித கோடி அணிமுடி மாலையும்புனித கற்பகப் பொன்னரி மாலையும்முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம்.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 16
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவகோடி கோடி குறட்சிறு பூதங்கள்பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 17
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்மேய காலம் அலாமையின் மீண்டவன்தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்றுஆய அன்னமும் காணா தயர்க்குமால்.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 18
காதில் வெண்குழையோன் கழல் தொழநெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்துதிக்கையோன் ஊர்தியைக் கண்டுமீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்றுவெண்சுடர் ஆனது என்றதன் கீழ்ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்என்றதனை வந்தணைதரும் கலுழன்.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 19
அரம்பையர் ஆடல் முழவுடன்மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்கவரம் பெறு காதல் மனத்துடன் தெய்வமது மலர் இருகையும் ஏந்திநிரந்தரம் மிடைந்த விமான சோபானநீடுயர் வழியினால் ஏறிப்புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்பொலிவதத் திருமலைப் புறம்பு.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 20
வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்காதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளார்பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான்.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 21
நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான்.
பாடலின் தனிப் பக்கம்
12 பாடல் 22
கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணிஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு.
பாடலின் தனிப் பக்கம்
13 பாடல் 23
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்துஇன்ன தன்மையன் என்றறியாச் சிவன்தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்உன்னாரும் சீர் உபமன் னிய முனி.
பாடலின் தனிப் பக்கம்
14 பாடல் 24
யாதவன் துவரைக்கிறை யாகியமாதவன் முடிமேல் அடி வைத்தவன்பூதநாதன் பொருவருந் தொண்டினுக்குஆதி அந்தம் இலாமை அடைந்தவன்.
பாடலின் தனிப் பக்கம்
15 பாடல் 25
அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டுசித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்பத்தராய முனிவர் பல்லாயிரவர்சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
பாடலின் தனிப் பக்கம்
16 பாடல் 26
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறுபொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
பாடலின் தனிப் பக்கம்
17 பாடல் 27
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசைவந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்எந்தையார் அருளால் அணைவான் என.
பாடலின் தனிப் பக்கம்
18 பாடல் 28
கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசைமெய்யில் ஆனந்த வாரி விரவிடச்செய்ய நீள்சடை மாமுனி செல்வுழிஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.
பாடலின் தனிப் பக்கம்
19 பாடல் 29
"சம்புவின் அடித் தாமரைப் போதலால்எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத்"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்".
பாடலின் தனிப் பக்கம்
20 பாடல் 30
என்றுகூற இறைஞ்சி இயம்புவார்வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்நன்று கேட்க விரும்பும் நசையினோம்இன்றெமக்குரை செய்து அருள் என்றலும்.
பாடலின் தனிப் பக்கம்
21 பாடல் 31
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்" வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகியவள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
பாடலின் தனிப் பக்கம்
22 பாடல் 32
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்குஇன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்துன்னினான் நந்தவனச் சூழலில்.
பாடலின் தனிப் பக்கம்
23 பாடல் 33
அங்கு முன்னரே ஆளுடை நாயகிகொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
பாடலின் தனிப் பக்கம்
24 பாடல் 34
அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்கந்த மாலைக் கமலினி என்பவர்கொந்து கொண்ட திருமலர் கொய்வுழிவந்து வானவர் ஈசர் அருள் என.
பாடலின் தனிப் பக்கம்
25 பாடல் 35
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.
பாடலின் தனிப் பக்கம்
26 பாடல் 36
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வனபன் மலர் கொய்து செல்லப் பனிமலர்அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்.
பாடலின் தனிப் பக்கம்
27 பாடல் 37
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவிமீது தோன்றி அம் மெல்லியலார் உடன்காதல் இன்பம் கலந்து அணைவாய்' என.
பாடலின் தனிப் பக்கம்
28 பாடல் 38
கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்மையல் மானுடமாய் மயங்கும் வழிஐயனே தடுத்தாண்டருள் செய்' என.
பாடலின் தனிப் பக்கம்
29 பாடல் 39
அங்கணாளன் அதற்கருள் செய்த பின்நங்கை மாருடன் நம்பிமற்றத் திசைதங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்றுஅங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்.
பாடலின் தனிப் பக்கம்
30 பாடல் 40
அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்"பந்த மானிடப் பாற்படு தென்திசைஇந்த வான்திசை எட்டினும் மேற்படவந்த புண்ணியம் யாதெ"ன மாதவன்.
பாடலின் தனிப் பக்கம்
31 பாடல் 41
"பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளதுபெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்றுஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்.
பாடலின் தனிப் பக்கம்
32 பாடல் 42
அத் திருப்பதியில் நமை ஆளுடைமெய்த் தவக்கொடி காண விருப்புடன்அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்றுஇத் திறம் பெறலாம் திசை எத்திசை..
பாடலின் தனிப் பக்கம்
33 பாடல் 43
பூதம் யாவையின் உள்ளலர் போதெனவேத மூலம் வெளிப்படு மேதினிக்காதல் மங்கை இதய கமலமாம்மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்
பாடலின் தனிப் பக்கம்
34 பாடல் 44
எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்றுஉம்பர் போற்றும் பதியும் உடையது.
பாடலின் தனிப் பக்கம்
35 பாடல் 45
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்துபொங்கு நீடருள் எய்திய பொற்பதுகங்கை வேணி மலரக் கனல்மலர்செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது.
பாடலின் தனிப் பக்கம்
36 பாடல் 46
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசைஈசர் தோணி புரத்துடன் எங்கணும்பூசனைக்குப் பொருந்தும் இடம் பலபேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை".
பாடலின் தனிப் பக்கம்
37 பாடல் 47
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையைஅன்று சொன்ன படியால் அடியவர்தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரிஇன்று என் ஆதரவால் இங்கியம்புகேன்.
பாடலின் தனிப் பக்கம்
38 பாடல் 48
மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்புற்று இடத்து எம்புராணர் அருளினால்சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.
பாடலின் தனிப் பக்கம்
39 பாடல் 49
அந்த மெய்ப் பதிகத்து அடியார்களைநம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பிபுந்தி ஆரப் புகன்ற வகையினால்வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
பாடலின் தனிப் பக்கம்
40 பாடல் 50
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடியநிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறைகுலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
பாடலின் தனிப் பக்கம்