புராணம் 2 / 5 · திருமலைச் சருக்கம் · சேக்கிழார்

திருநாட்டுச் சிறப்பு

Thirunaattu Sirappu · 35 பாடல்கள் · 51–85

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 51
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரிநாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன்.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 52
ஆதி மாதவமுனி அகத்தியன் தருபூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரிமாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 53
சையமால் வரை பயில் தலைமை சான்றதுசெய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றதுவையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 54
மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்போலும் நான்முகனையும் பொன்னி மாநதி.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 55
திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழிகங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 56
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகிஉண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 57
வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்துஎம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னிஉம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால்.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 58
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்பூசும் குங்குமமும் புனை சாந்தமும்வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்தேசுடைத் தெனினும் தெளிவில்லதே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 59
மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தருபூ விரித்த புதுமதுப் பொங்கிடவாவியிற் பொலி நாடு வளம்தரக்காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால்.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 60
ஒண் துறைத் தலை மாமத கூடு போய்மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 61
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
12 பாடல் 62
உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறுஇழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்தொழுது நாறு நடுவார் தொகுதியேபழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
பாடலின் தனிப் பக்கம்
13 பாடல் 63
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.
பாடலின் தனிப் பக்கம்
14 பாடல் 64
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டைஅங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.
பாடலின் தனிப் பக்கம்
15 பாடல் 65
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்னவரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்.
பாடலின் தனிப் பக்கம்
16 பாடல் 66
கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசிவியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.
பாடலின் தனிப் பக்கம்
17 பாடல் 67
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்புமாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளைகோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்னநாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்.
பாடலின் தனிப் பக்கம்
18 பாடல் 68
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
பாடலின் தனிப் பக்கம்
19 பாடல் 69
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்கன்னி வாளை கமுகின் மேற்பாய்வனமன்னு வான்மிசை வானவில் போலுமால்.
பாடலின் தனிப் பக்கம்
20 பாடல் 70
காவினிற் பயிலுங்களி வண்டினம்வாவியிற் படிந்து உண்ணும் மலர் மதுமேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்தாவி அப்பொழிலிற் கனி சாடுமால்
பாடலின் தனிப் பக்கம்
21 பாடல் 71
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்குவாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்.
பாடலின் தனிப் பக்கம்
22 பாடல் 72
பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றைவித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்.
பாடலின் தனிப் பக்கம்
23 பாடல் 73
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
பாடலின் தனிப் பக்கம்
24 பாடல் 74
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.
பாடலின் தனிப் பக்கம்
25 பாடல் 75
வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
பாடலின் தனிப் பக்கம்
26 பாடல் 76
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கிவரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
27 பாடல் 77
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
28 பாடல் 78
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
29 பாடல் 79
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
30 பாடல் 80
மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
31 பாடல் 81
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
32 பாடல் 82
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
33 பாடல் 83
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.
பாடலின் தனிப் பக்கம்
34 பாடல் 84
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பாநீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும்
பாடலின் தனிப் பக்கம்
35 பாடல் 85
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ.
பாடலின் தனிப் பக்கம்