எதிர் கொள்வான் வருகின்ற வய வேந்தன்தனைக் கண்ணுற்று, எழிலி நாணஅதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர் பிரான்இழிந்துழிச் சென்று அடியின் வீழ,முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க,எடுத்து இறுக முயங்கலோடும்,கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி,இவை உரைத்தான் களிப்பின் மிக்கான்.