பாடல் 26 · சதுரகிரி அறப்பளீசுர சதகம் · அம்பலவாணக் கவிராயர்
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 26 · நற்குணங்களுக் கிடமாகாதவர்
வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு கள்ளுண்டுவெங்காயஞ் சொறிப் புதறிலேவீழ்ந்துதேள் கொட்டிடச் சன்மார்க்க மெள்ளளவுமேவுமே மேவாது போல்குறைகின்ற புத்தியா யதிலற்ப சாதியாய்க்கூடவே யிளமை யுண்டாய்க்கொஞ்சமா மதிகார முங்கிடைத் தான்மிக்ககுவலயந் தனி லவர்க்குநிறைகின்ற பத்தியுஞ் சீலமும் மேன்மையுநிதானமும் பெரியோர்கண் மேனேசமு மீகையு மிவையெலாங் கனவிலும்நினைவிலும் வராது கண்டாய்அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலேயண்ணலே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.