பாடல் 18 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 18
தம்மாலொ ருதவிபுரியாவிடினும் வாக்குச்சகாயம் பிறர்க்குரைக்குந்தன்மைபோ னீயருள் கொடாவிடிலு னன்பர்பாற்சாற்றா திரண்டுமின்றிச்சும்மா விருப்பதென் றேகியென் றானாஸ்திசொல்லுதல் பெருந்தன்மையோதூயவெண் ணான்கறம் வளர்த்தா ளெனப்புவனிசொல்லுவது நீயல்லையோஅம்மா விதற்கேது புகல்கிறா யுனையன்றியாரேனு மருள்செய்வரோவங்கயற் கண்குழை கிழித்துப் புரண்டுபோந்தளகபா ரங்கிடக்குஞ்சிம்மா சனத்துரைப் பெண்ணே பனிக்கிரிசெனிக்கவளர் கின்றகண்ணேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.