பாடல் 23 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 23
காலிட்ட பாதுகையின் மதிவைத்த திருமுடிக்கதுவுபழ மலர்கடிந்துகனிவாயி னீர்பெய்து தனதுசென் னிக்குடலைகாத்தபூந் தழைசொரிந்துகோலிட்ட செஞ்சிலைய வேடனுச் சிட்டக்கொழுந்தசை கொடுக்கவாங்கிக்கொண்டுமவ னுள்ளன்பு கண்டுமெய்ப் பதவியருள்குன்றாத கருணைவள்ளல்பாலிட்ட மால்விடைக் கொடியுயர்த் தோன்கிரணபாலலோ சனமகேசன்பங்கேரு கத்தவிசின் மேயபுத் தேடலைபறித்தசிவ சம்புமேவுஞ்சேலிட்ட வஞ்சனத் துணைவிழிச் சிந்துரந்திகழ்நுதற் பெண்ணரசியேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (23)