பாடல் 1 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா

கஞ்சகிரி சித்தேசர் சதகம் 1 · அந்தணர் சிறப்பு

பூமேவு வைதீக நியதிநெறி வழுவாது புனலின் முச் சந்திமூழ்கிப்புனிதமுறு பகவதர்ச் சனைபுரிந் தொழுகலும் புகழும்யா காதி நிகழத்தேமேவு விரதமும் மறையாக மங்கலைக டேர்ந்தோது கின்றநலனுஞ்சீலமிகு பத்தியொடு காலமுறை தவறாது ஜெபதபஞ் செய்துறுதியாய்மாமேவு காயத்ரி மகிமையா லுஞ்சுருதி மந்திரபலத்தினாலும்மாதமொரு மும்மாரி பொழியவைத் துலகெலாம் வளமுறச் செய்து நன்றாய்க்காமேவு தருவெனத் தருமுறையு மறையோர்ம கத்வமென லாகுமன்றோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.
பகிர்