பாடல் 4 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 4 · வேளாளர் சிறப்பு
தொனிக்கின்ற மறையவ ரொழுக்கமும் புவிமீது தோன்றலர் நடாத்துமரசுந்தொகைபெரிய லாபமுறு வணிகருயர் மேன்மையுஞ் சுபசோப னஞ்செய்வதும்நனைக்கின்ற துணிகளும் பணிகளோடணிமருவு நாரியர்க ளகமோகமும்நாமகள் விலாசமுந் தானதரு மங்களொடு நானாவி தஞ்செய்வதுந்தனக்கென்று மன்றேறி விவகார மேசெய்து சாதித்து வருலாபமுந்தாதாவெ னப்பெய ரெடுப்பதுவு நன்றாய்த் தராதலமெ லாஞ்செழிக்கக்கனக்கின்ற வேளாளர் புரிகின்ற விவசாய காரியவ சத்ததன்றோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.