பாடல் 81 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 81 · இதனாலிவை பாவமெனல்
தருவினிழலில்லாத நெடுவழி நடப்பதே தாள்செய்த பாவமாகுஞ்சச்சிதா னந்தனைப் பணியாத தேதன் சரீரமது செய்தபாவம்மருவுமனை யாட்டிதுர்க் குணியாக வாய்ப்பதே மணமகன் செய்தபாவம்மக்களுயர் தேட்டாமை யுண்ணா திருப்பதே மாதாபி தாசெய்பாவம்பருவமதில் மக்களுண் டாகாத தேயனு பவிப்பவர் புரிந்தபாவம்பாக்கியம துற்றபோ தொருவர்க்கு மீயாமை பாணிசெய் பாவமாகுங்கருவிழிப் பார்வைகுரு டாவதே யவர்களிரு கண்கள்செய் பாவமன்றோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.