பாடல் 42 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்

கதிர்காமக் கலம்பகம் 42

ஈரமதி புனைசடிலத் தரனார் பிச்சைக்கிரங்கிமா தங்கங் கொடுத்த சித்தரேம்யாங்காரளவு கதிர்காம னருள்கைக் கொண்டக்கரியோர்க்குப் பொன்றனைக்கல் யாணஞ் செய்தோங்கூரயிலாற் குன்றமெலா மிகை செய்தோங்கூழையும்பூ ரியிற்சமைத்துக் கொடுப்போ மப்பாகாரத்தைக் கனகமெனக் காட்டிச் சிங்கக்கணத்தினையு மரிபோலக் காட்டு வோமே.
பகிர்