பாடல் 87 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 87

முட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத்திரைவர வுறங்குங் குருகு விரிசிறைச்செங்கா னாரைக்குச் சிவபதங் கிடைத்தெனப்பைம்புனன் மூழ்கிப் பதும பீடத்தூற்றமி றாமு முலப்பில் பஃறவம்வீற்றுவீற் றிருந்து நோற்பன கடுக்குங்குண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும்வண்டமிழ்க் கடலின் றண்டுறைச் சங்கமுமுத்தகம் பயின்று காவியங் கற்றுச்சித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லுந்தடம்பணை யுடுத்த தண்டமிழ்க் கூடலிடங்கொண் டிருந்த விமையா முக்கட்கருமிடற் றொருவநின் றிருவடி வழுத்துதுந்தாய்நலங் கவருபு தத்தையுயிர் செகுத்தாங்கிருபெருங் குரவரி னொருபழி சுமந்தபுன்றொழி லொருவற்குப் புகலின்மை தெரீஇஅன்றருள் சுரந்த தொன்றோ சென்றதோர்வலியாற் கருள்வதூஉ நோக்கிஎளியார்க் கெளியைமற் றென்பது குறித்தே
பகிர்