பாடல் 12 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 12 · நிலைமண்டிலவாசிரியப்பா

நாத வுருக்கொளு நாயக மாசிலாநாதவிப் பூதல நண்ண வெண்னுபுசீத மதிக்கலை நீத்தனை யொப்பறுபோத மதிக்கலை பூண்டனை தீதுசெய்வன்பணி தீர்த்தனை நன்பணி யேற்றனைமின்பணி திருத்தினை யென்பணி திருத்தினைமாதவர்க் கருளினை போதமெற் கருளினைநடமிடு பரியிவர் வடதிசை வாழுமோர்சக்கிலித் தோழமை தக்கதன் றெனவுனாப்பக்குவ வுளதினர் தொக்கவீற் றிருந்தனைசூலியென் றிடுபெயர் நீலியைத் துறந்தனைபுல்லாடை நீக்கினை கல்லாடை வீக்கினைஅக்கணி யொருவினை யக்கணி மருவினைகயிலை துறந்தனை துறைசை யுறைந்தனைஅன்புடை யடியர்மே லன்பையு மளவறுஓகையு மீகையு மோட்ட மறந்தனைஆதலி னடியேற் கருமறை யறிவருபாத மளித்தருள் பாலிப் பாயே
பகிர்