தாயுமானவர் வரலாறு · திருச்சிராப்பள்ளித் தல புராணம்தாயும் ஆனவன்
காவிரியின் வடகரையில் இரத்தினாவதி என்ற பெண் வாழ்ந்தாள். திருச்சிராப்பள்ளி மலைமேல் கோயில் கொண்ட சிவபெருமானிடம் அவளுக்கு ஆழ்ந்த பக்தி. அவளுக்குப் பேறுகாலம் நெருங்கியது. துணைக்கு வருவதாகச் சொன்ன தாய் காவிரியின் தென்கரையில் இருந்தாள்.
தாய் புறப்பட்ட நாளில் காவிரியில் பெருவெள்ளம் வந்தது. ஓடங்கள் ஓடவில்லை. தாய் அக்கரையில் தவித்து நின்றாள். இக்கரையில் மகளுக்கு வலி தொடங்கியது. உதவிக்கு யாரும் இல்லை. "மலைக்கொழுந்தே, நீயே துணை" என்று அவள் இறைவனை நினைந்து அழுதாள்.
சிறிது நேரத்தில் அவள் தாய் வாசலில் வந்து நின்றாள். மகளைத் தேற்றினாள்; பேறு பார்த்தாள்; குழந்தையைக் குளிப்பாட்டினாள்; சில நாள்கள் உடனிருந்து பத்தியம் செய்து பேணினாள்.
வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஓடம் ஏறி ஓடி வந்தாள். வீட்டுக்குள் தன்னைப் போலவே ஒருத்தி இருப்பதைக் கண்டு திகைத்தாள். அக்கணமே முதலில் வந்த தாய் மறைந்தாள்; இறைவன் உமையோடு விடைமேல் காட்சி தந்தார். அடியவளுக்காகத் தாயாகவும் வந்தவன் என்பதால் அந்தத் தலத்து இறைவனுக்குத் 'தாயுமானவர்' என்ற திருப்பெயர் வழங்குகிறது.
The story of Thayumanavar, from the temple tradition of ThiruchirappalliHe Who Became the Mother Too
On the north bank of the Kaveri lived a woman named Ratnavati. She had deep devotion to Lord Siva, whose temple stands on the rock of Thiruchirappalli. The time for her child to be born drew near. Her mother, who had promised to come and help, lived on the south bank of the river.
On the day the mother set out, a great flood came down the Kaveri. No boats could cross. The mother stood helpless on the far bank. On the near bank the daughter's pains began. There was no one to help. "Lord of the rock, you alone are my help," she wept, thinking of him.
In a little while her mother came and stood at the door. She comforted her daughter, delivered the child, bathed the baby, and stayed some days nursing her and preparing her food.
The flood went down. The real mother got into a boat and came running. She was astonished to see a woman exactly like herself inside the house. At that instant the mother who had come first vanished, and the Lord appeared with Uma on the bull. Because he came even as a mother for the sake of his devotee, the Lord of that place is called Thayumanavar, 'he who became the mother too'.