பாடல் 68 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்
திருத்தொண்டர் சதகம் 68 · கோட்புலி நாயனார்
வேதமலி சோணாட்டு நாட்டியத் தான்குடியின்வேளாளர் கோட்புலியர் மால்வேந்தர்தந் திரியராய்ப் பாந்தளணி வார்க்கமுதுவேண்டுமென நெற்குவை மிகப்போதமனை யவர் தமக் கோதிராட் டார்கள் வெம்போரின் மேற் செல்ல வுலகிற்பொங்கும்வற காலங்கள் வந்திடத் தாம்பசிபொறாமலுண் டிடவு மாற்றார்மீதடற் கொண்டுவரு போதறிந் தாணை மொழிமீறுகிளை ஞர்க்கினிய சொல்வினவித் தடிந்திடப் பிள்ளையையும் வாளினால்வீசிடக் கண்டு கந்தேமாதகவி னிந்நிலையி னுடனணைக வென்று முன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.