பாடல் 70 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்
திருத்தொண்டர் சதகம் 70 · பரமனைப்பாவோர்நாயனார்
சீலமிகு தெய்வமொழி நூலுநற் கலசமுனிசெய்தவண் டமிழி லூலுந்தேசிகத் தொடுநவில் சிவாகமச் சொற்கள் வகைதேர்ந்து பல கலைக ளாய்த்துஞாலமதின் மிக்குமெக் காலையினு மெய்யுவகைநண்ணியெழின் மன்று ளாடும்நாதவே தாந்தபரி பூரணானந்தமெஞ்ஞானமோ னந்த ரூபபாலமுறை செங்கர திரி சூலகங் காதரபராபர சிவாய முக்கட்பரமனென் றேபாடு மடியார்கள் கெதிபொம்பார்விண் புகுந் தேறியுமாலயனு மறியாத சேவடிகள் தொழு திடமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைாகர்மாணிக்க மலை நாதனே.