பாடல் 577 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 14 / 157
மாடங்களில் மாதர்கள் காட்சி
கம்பராமாயணம் 577 · மிதிலைக் காட்சிப் படலம்
வாள் அரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்கேளொடு கிடந்த நீலச் சுருளும், செம் கிடையும் கொண்டு,நீள் இரும் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்சாளரம் தோறும் தோன்றும், சந்திர உதயம் கண்டார்.