பாடல் 31 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 31 · ஆசிரியப்பா
என்றுபன் னிருவ ரிம்பரிற் றோன்றிப்புறத்துறு மிருளைப் போக்குதற் பொருவத்தேவர் திருவாய்ச் செவ்விதின் மலர்ந்தசெந்தமிழ்ப் பன்னிரு திகழ்சூத் திரமும்ஆருயிர்த் திரளி னகத்திரு ணீக்கிஅருஞ்சிவ ஞானப் பெருங்கதிர் பரப்பிவிளங்கு மென்ன வெள்ளறி வுடையேன்தொகையாற் றொழிலாற் சொற்றன னேனும்உபமா னத்தினு முபமே யம்மேசிறப்புடைத் தென்னச் செவ்வதி னன்குதேர்ந்தே னன்றித் தெளியே னல்லேன்விரிபொழி லிளமர் மேவும்மெய்கண்ட தேவ விரைந்தரு ளெனையே