பாடல் 35 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 35 · ஆசிரியப்பா

பொண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ப் பதியில்செந்தமிழ் நாடு செய்பெருந் தவத்தால்வந்தவ தரித்த மாசிலா மணியேஎய்ப்பினில் வைப்பே யிலகொளி விளக்கேமெய்கண்ட தேவச் சைவமா முகிலேதிப்பியம் பழுத்த தேசிக வடிவேசத்தறி வின்பத் தற்பரம் பொருளேஇளம ரமுதே யெளியேன் பேறேதேவர் திருமுன் செய்விண் ணப்பம்ஒன்றுள ததுதா னொதியே னென்றுஞ்சுடுநர கழுந்தித் துன்புழந் திடினும்நின்னடி மாட்டு நிறைபே ரன்பேஈங்கிது நினகின் றீவதன் றென்னில்உலகினி துய்வா னொருநீ யுரைத்ததன்னே ரில்லாத் தனிச்சிவ ஞானபோத மென்னுஞ் சாத நூலின்பொருளினை யேனும் புந்திமறவா திருக்கும் வரமளித் தருளே.
பகிர்