பாடல் 39 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 39 · ஆசிரியப்பா
ஏடார் கமலப் பீடார் மனையில்பொற்பவீற் றிருக்கு முற்பவப் புத்தேள்தாழா தியற்று மேழேழ் புவியில்வெவ்வேறாக விளங்கும் பிறவிஅன்னா டொட்டே யிந்நாள் காறும்எளியே னேய்ந்தவை யிலக்கங் காணில்வானின் மீனும் வண்புவி மணலும்ஆருயிர்த் தொகையு மமையு மென்பஅன்றியு மனைய வாழ்பவந் தோறும்எய்திய துன்போ விதிற்பன் மடங்கேஇனுமிப் பிறவி யெய்து மென்னில்என்றே யெளியே னெய்துவ னின்னைஇறப்பும் பிறப்பும் மெய்துபல் துன்பும்என்று நினக்கே யியற்கையா மென்னில்ஆண்டவ னெனநீ யடியவ னெனெயான்இருத்தலி னென்னே யெய்துறு பயனேஆதலின்இளமர்ப் பதியி லேய்மெய் கண்டதேசிக மணியே சிறியேன்வன்பவ நீக்கி வழங்கருட் சீரே.