பாடல் 8 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 8 · ஆசிரியப்பா

கண்டதே காட்சி கொண்டதே கோலம்உண்டதே போகமண்டலத் தன்றிபின்றைநா ளுறுசதி யென்றொன் றுலதோஎன்றிறு மாகும் புன்றொழிற் சிலவர்குழுவிற் சாரா தொழுகுறப் பணித்தும்தத்துவ நியதி தாமே களைந்தேஒத்தவந் நிலையி லுறுமுயிர் தானேபிரமமா மென்னச் சிரமமோ டோதும்மாயாவாதப் பேயோர் தம்பால்கட்புலந் தானும் பெட்பொடு படராவிதமே யென்று மிதமென் றுரைத்தும்காலமே தெய்வங் கருமமே கருத்தாச்சத்தமே யிணையில் வத்தெனக் கிளைந்துநாத்திகம் பேசி வாய்த்தழும் பேறியுந்திரிவோ ருறவை மருவா தளித்தும்கடல் கடை ஞான்று படர்தரவெழுந்தஆலவிடங்கண் டோலமென் றோடிஅருந்ததி யனைய பிருந்தையைப் பெட்டுக்கரவொழுக் காக விரவிட வனையாள்அக்குறிப் போர்ந்தே சிக்கெனத் தானேபழிப்புறு மிவ்வுட லொழிக்குவ லென்றுதீயினை வளர்த்தி மாய்குறக் கண்டஅத்தேத் துளமிகப் பித்தே றினனாய்ச்சாம்பரில் வீழ்ந்து தேம்பித் திரிந்தேதசமுகன் றனைய னிசைவுடன் வாளால்மாயச் சனகியை யேயவே வெட்டப்பார்த்து வெரீஇ வேர்த்தழு திரங்கிஇன்னும் பலவாப் பன்னுந் துயரொடுபலப்பல பிறவி கலப்புற நாளும்கொண்டே யுழிதரு விண்டே பரமெனஐந்திரு ணூல்வழி வந்தோர் வீழும்படுகுழி வீழாத் திடவறி வீந்தும்இன்னோ ரன்ன புன்னெறி மாக்கள்பின்னெவ ருளரோ வன்னவர் தங்கள்முன்னரு நில்லா முதன்மை நல்கிதானே வந்து தடுத்தாட் கொண்டுசைவசித் தாந்த மெய்ந்நெறி வழங்கிஆனா வின்பத் தரும்பெறல் வாழ்விற்செம்மாந் திருக்குந் திருவமின் றளித்தான்பொல்லா ரருணெறி கல்லா வெற்கும்நொச்சியம் பதியின் முச்சகம் பரவமெய்கண்ட நாம மேவுங்கைகண்ட வின்பக் கருணையங் கடலே.
பகிர்